புதிய பாதையை நோக்கி ...

மன்றத்தின் குறிக்கோள்

  • இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் வளர்த்தல். சின்னஞ்சிறு குழந்தைகளிடம் உள்ள கலையுணர்வைத் தூண்டல்
  • மாணவர்கள் பேச்சு, கதை, கட்டுரை, நாடகம், கவிதை, ஓவியல் முதலிய பல துறைகளிலும் சிறந்து விளங்க ஊக்குவித்தல்.
  • மாதிரித் தமிழ்த்தேர்வுகள் நடத்தி மாணவர்க்கும் பயிற்சியளித்தல்.
  • வெளிநாடுகளில் வாழ் தமிழர்களுக்குத் தமிழ் மணிப் புலவர் பட்டயத்தேர்வு நடத்துதல்.
  • அரசு உதவிபெறும் மாணவர் மன்றத் தொடக்கப் பள்ளி டாக்டர் தருமாம்பாள் நடுநிலைப்பள்ளி ஆகிய இருபள்ளிகளை நடத்துதல்.
  • தமிழ், தமிழாசிரியர் நலன்களுக்கு உறைத்தல்.
  • பேரறிஞர்களைக் கொண்டு இலக்கியச் சொற்பொழிவாற்றச் செய்தல்.
  • சிறந்த தமிழ் நூல்கள் வெளியிடதல்.
  • 'நித்திலக் குவியல்' திங்களிதழ் வெளியிடுதல்.

தொடக்க காலப்பணிகள்

இம்மன்றம் மாணவர்கள் பலர் கூடிப் பல பொருள்கள் பற்றிப் பேசித் தம் சொல்லாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும என்ற நோக்கத்துடனேயே தொடக்கத்தில் பணியாற்றி வந்தது, அந்த இளம் பருவத்திலேயே இம்மன்றம் அறிஞர்கள் பாராட்டக்கூடிய பல அருஞ்செயல்களைச் செய்துள்ளது. சென்னையில் உள்ள உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு சென்னைக் கடற்கரையில் மாணவர் மாநாடு நடத்திய பெருமை இம்மன்றத்திற்கு உண்டு. இதுவே சென்னையில் நடைபெற்ற 'முதல் மாணவர் மாநாடு' என்று கூறலாம். மற்றும் இலக்கிய வகுப்புகள் நடத்துதல், மாணவர்களுக்குப் பல துறைகளிலும் அறிவு ஆற்றல் வளரப் பலவகைப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கல், சான்றோர்களைக் கொண்டு ஆங்காங்குத் தமிழ் விரிவுரைகள் ஆற்றச் செய்து தமிழ் வளர்த்தல் ஆகிய இத்துறைகளிலேயே மன்றம் தொடக்க காலத்தில் பணியாற்றி வந்தது.